தமிழ்நாட்டின் திருச்சியில் மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (NIT – Trichy) சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் விடுதி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு பணியிடங்களை தற்காலிக (Temporary) அடிப்படையில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 48 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிட விவரம்:

கணக்கு அதிகாரி – 1
பொறியாளர் – 1
விடுதி மேனேஜர் – 5
கணக்காளர் – 4
பயிற்சி பொறியியல் – 3
டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் – 4
விடுதி உதவியாளர் மேனேஜர் – 27
மேட்ரான் – 2
பல்நோக்கு பணியாளர் – 1
வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி:

கணக்கு அதிகாரி: இந்த பதவிக்கு B.Com / M.Com / ICWA / CA முடித்திருக்க வேண்டும். கணக்கு துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியனுபவம் அவசியம். ஓய்வு பெற்றவர்கள் அல்லது ஓய்வு பெற உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 60 முதல் 70 வயது வரை.
பொறியாளர்: சிவில் அல்லது எலெக்ட்ரிக்கல் பிரிவில் B.E / B.Tech முடித்திருக்க வேண்டும்.
விடுதி மேனேஜர்: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கணக்காளர்: வணிகம் தொடர்பான இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் 5 ஆண்டுகள் பணியனுபவம் தேவை.
பயிற்சி பொறியாளர்: கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடு ஆகிய துறைகளில் B.E / B.Tech / BCA / MCA / MSc முடித்து, 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்: ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
விடுதி உதவியாளர்: இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் 1 ஆண்டு அனுபவம் தேவை.
மேட்ரான்: இந்த பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். சமூகவியல், சமூகப் பணி, பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் முதுகலை அல்லது ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் அவசியம்.
பல்நோக்கு உதவியாளர்: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, தட்டச்சு திறன், கணினி பயன்பாடு, நல்ல தகவல் தொடர்புத் திறன் மற்றும் 1 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: கணக்கு அதிகாரி – ரூ.40,000, பொறியாளர் – ரூ.26,790 வழங்கப்படும். இதர பதவிகளுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு சம்பளம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: விண்னப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, எழுத்துத்தேர்வு/ நேர்காணல் ஆகியவை நடத்தப்படும். தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுவதால், பெரும்பாலும் நேர்காணல் அடிப்படையில் அமையும்.
விண்ணப்பிப்பது எப்படி? திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (NIT) விடுதி நிர்வாகத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், அதற்கான உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் தபால் மூலம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பப் படிவத்தை https://www.nitt.edu/home/other/jobs/ என்ற NIT திருச்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2025.

