திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட பொறியாளர் அணி சார்பாக அரசு பள்ளிகளுக்கு ஆர்.ஓ வாட்டர் இயந்திரம் வழங்கினார் நிகழ்வு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழக துணை முதல்வர் – திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட – மாநகர பொறியாளர் அணி சார்பாக அரசு பள்ளிகளில் ஆர்.ஓ வாட்டர் இயந்திரம் வழங்கும் நிகழ்வு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அரசு பள்ளிக்கு அர்ப்பணித்தார்

மாவட்டச் செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு மாணவச் செல்வங்களுக்கு அர்ப்பணித்தார் .
டி.சி.எம்.(DCM -) 48 என்ற தலைப்பில் தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அதில் மாவட்ட மாநகர பொறியாளர் அணி சார்பாக, பொறியாளர் அணி மாவட்ட – மாநகர அணி அமைப்பாளர்கள் எம். ஜியாவுதீன், சி.எம். மெய்யப்பன் ஆகியோர் தலைமையில், திருச்சி மார்க்கெட் பெரிய சௌராஷ்ட்ரா தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் வேங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆர்.ஓ. குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்து மாவட்ட திமுகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பள்ளி மாணவ செல்வங்களுக்காக அர்ப்பணித்தார்.
இந்த நிகழ்வில் மாநகர செயலாளர்
மு.மதிவாணன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முகமது ஃபயாஸ், ராஜா, பகுதி செயலாளர் பாபு ,ஒன்றிய செயலாளர் கே. எஸ். எம். கருணாநிதி, மாவட்ட மாநகர பொறியாளர் அணி நிர்வாகிகள் தென்னரசு, இன்பா, நடராஜன், செல்வராஜ், பாலசுப்பிரமணியன், சிபி சக்கரவர்த்தி, நவநீதகிருஷ்ணன், அசோக், சாக்ரடீஸ், செந்தில் ராம், தினேஷ் கண்ணா, மணிகண்டன், அறிவழகன், முகமது சித்திக், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுகளின் போது *அமைச்சர் தொகுதியில் (திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி)வேங்கூரில் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்திலும் ,தூய தமிழிலும் சரளமான பேச்சை கேட்டு பெருமிதம் கொண்ட பள்ளிகல்ல்வித் துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அவர்களைப் பாராட்டினார்.

