எஸ் ஐ ஆர் பணிகளில் முறைகேடு : நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் . அதிமுக திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலெக்டரிடம் பரபரப்பு புகார்
திருச்சியில் எஸ்.ஐ.ஆர்.
பணிகளில் முறைகேடு,
நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கலெக்டரிடம் அதிமுகவினர் பரபரப்பு புகார்.
திருச்சி மாநகரில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் பி.எஸ்.ஓ. பணியில் உள்ள பலர் ஆளுங்கட்சியான திமுக நிர்வாகிகளின் கைபாவையாக செயல்பட்டு திருச்சி, மாநகருக்கு உட்பட்ட பல பகுதிகளில் இறந்துபோன வாக்காளர்கள் மற்றும் பழைய முகவரியிலிருந்து வேறு முகவரிக்கு சென்ற வாக்காளர்களின் எஸ்.ஐ.ஆர். படிவங்களை ஆளுங்கட்சி நிர்வாகிகள் பி.எஸ்.ஓ.க்களிடமிருந்து கைப்பற்றி சட்ட விரோதமாக அதனை ஆன்லைனில் எவ்வித உண்மை தன்மை இல்லாமல் பதிவேற்றம் செய்து வருகின்றார்கள். அதற்கு உடந்தைகயாக செயல்படும் பி.எல்.ஓ.க்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேயருமான சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சரவணனை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும் அந்த எஸ்.ஐ.ஆரில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அத்து மீறல்களில் ஈடுபடும் ஆளுங்கட்சியினர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் அதிமுக பொதுச்செயலாளர் அனுமதியோடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி மனு அளித்தனர்.
மனு கொடுக்கும் நிகழ்வின் போது,பகுதி செயலாளர்கள் அன்பழகன்,ரோஜர் ,கலைவாணன்,
மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த்,ஐடி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு,மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சில்வர் சதீஷ்குமார்,பேரவை இணைச் செயலாளர் கருமண்டபம் சுரேந்தர் ஆதவன், பெருமாள், .வழக்கறிஞர் அணி முல்லை சுரேஷ், வரகனேரி சசிகுமார்,கௌசல்யா,தினேஷ் பாபு, வட்ட செயலாளர் கதிரவன், விக்னேஷ், சந்தோஷ் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

