திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் வருகிற 29-ந் தேதி போராட்டம் நடத்த தீர்மானம்
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில்
வருகிற 29-ந் தேதி போராட்டம் நடத்துவது என தீர்மானம்
திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிலாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சின்னத்துரை தலைமை தாங்கினார். சிஐடியு, LLFசுரேஷ் ,
சி.ஐ டி .யு.மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், LLF செல்வகுமார்
,ஜி.கே ராமர்,தக்காளி ரமேஷ்,தக்காளி சுப்பிரமணி, இங்கிலீஷ் காய்கறி சங்க நிர்வாகிகள் பிரபு,பெரியசாமி, மந்தை நிர்வாகிகள் குமார்,சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்
.கூட்டத்தில் வருகின்ற 29-ந் தேதி வேலை இழந்த 12 தொழிலாளர்களுக்கு வேலை கேட்டு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

