திருச்சி இளம் பெண்ணிற்கு 9 கோடி ரூபாய் ஜி எஸ் டி அபராதம் கட்ட வந்த உத்தரவால் அதிர்ச்சி.
திருச்சியை சேர்ந்த பெண்ணின் ஆதார், பான் கார்டு பயன்படுத்தி மோசடி
ஒன்பது கோடி ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என வந்த உத்தரவால் பரபரப்பு.
திருச்சியை சேர்ந்த கலைவாணி என்கிற பெண்ணின் ஆதார் மட்டும் பான் கார்டை பயன்படுத்தி புதிய நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். அந்த நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி அபராத தொகையாக 9 கோடி ரூபாய் கட்ட வேண்டும் எனவும் அந்த தொகையை கலைவாணி தான் கட்ட வேண்டும் என கூறி அவர் கணக்கு வைத்துள்ள வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கலைவாணி இன்று திருச்சி மாநகர சைபர் கிரைம் போலிஸில் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

