புங்கனூர் பகுதியில் வேளாண் நிலத்தில் மாடுகளை மேச்சலுக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் மனு.
புங்கனூர் பகுதியில்
வேளாண் நிலத்தில் மாடுகள் மேச்சலுக்கு
விடுபவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க தமாகா திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு.
தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் திருச்சி மாநகராட்சி ஆணையரை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது இராஜராஜ சோழன் மன்னனால் உய்ய கொண்டான் வாய்க்கால் வெட்டப்பட்டது. இந்நிலையில் ஆற்றில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இது தொடர்பாக நாங்கள் கொடுத்த மனுவை தொடர்ந்து ரூ. 8 கோடி மதிப்பில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு சாக்கடை கழிவுகள் உய்யக்கொண்டான் ஆற்றில் கலக்காமல் தடுக்க நடவடிக்கை
எடுப்பதாகவும், ஆண்டுக்கு ரூபாய் 2 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்து அந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே உய்யக் கொண்டான் வாய்க்காலை சாக்கடை கழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு மனுவில், மாநகராட்சி 55 வது வார்டுக்கு உட்பட்ட பிராட்டியூர் பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகளை சிலர்
புங்கனூர் பகுதியில் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுவதால் வேளாண் பயிர்கள் பாதிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர்.
மனு அளித்த போது வயலூர் ராஜேந்திரன்,சேட்டு சின்னதம்பி பரமசிவம்

