Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுக கூட்டணியில் பிளவு வந்துவிடக் கூடாதா? என பலரும் ஏங்குகின்றனர் அதற்கு தமிழக முதல்வர் ஒரு காலத்திலும் வழி விடமாட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

0

'- Advertisement -

திமுக கூட்டணியில்

பிளவு வந்துவிடக் கூடாதா? என பலரும் ஏங்குகின்றனர் அதற்கு தமிழக முதல்வர்

ஒரு காலத்திலும் வழி விடமாட்டார் திருச்சியில்

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி..

 

திருச்சி காவிரி கரையின் ஓயாமரி எதிர்ப்புறம், காவிரி ஆற்றில் மீன் வனத்தை பெருக்க, மீன் வளத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முனைவர்.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கலந்து கொண்டு காவிரி ஆற்றில் மீன் குஞ்சுகளை விட்டார்.

 

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

 

முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி, ஆற்றுக்குள் மீன் வளத்தை பேணி காக்கும் வகையில் மீன் குஞ்சுகளை ஆற்றுக்குள்ளே விட்டுவருகிறோம். இயற்கை வளத்தை பாதுகாத்து வளப்படுத்துதற்கான பணிகளில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளோம்.

நெட் தேர்வில், ஆசிரியர்களின் முதன்மை பாடத்தில் இருந்து தான் கேள்விகள் கேட்க வேண்டும் என்பது குறித்து, ஆசிரியர் சங்கத்தை சார்ந்தவர்களுடன் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்தினோம். பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறியுள்ளனர். கூட்டத்திற்கு பின் அவர்களின் கருத்துக்களை முதல்வரிடம் எடுத்து வைத்தோம். ஒரு பக்கம் சட்ட போராட்டம், மறுபக்கம் நம்முடைய ஆசிரியர்கள் ஒருவரை கூட கைவிட்டு விடாமல், அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்காமல், என்ன பணிகளை செய்ய முடியுமோ? அதை செய்துவருகிறோம்.

 

இந்த விவகாரத்தில், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே, தமிழக முதல்வர் எடுக்கும் முன்னெடுப்புகள், மிகப்பெரிய நன்மை செய்தியாக அமையும்.

 

உதயநிதிக்கு சப்ஜெக்ட் நாலேட்ஜ் இல்லை என அண்ணாமலை விபரம் தெரியாமல் கூறியுள்ளார்.

 

இன்றை இளைய சமுதாயத்தினரின் திறன் மேம்பாட்டிற்கு துணை முதலமைச்சர் எடுத்துவரும் முன்னெடுப்புகளை பாருங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என இன்று பலரும் போற்றுகின்றனர்.

 

படித்த இளைஞர்களை அடுத்த கட்டமாக வேலைவாய்ப்பு பெற தமிழக அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் துணை புரிகின்றன. ‘நான் முதல்வன் திட்டம்’ சார்ந்த பணிகளைப்பற்றி அண்ணாமலை தெரிந்து கொண்டு பேசவேண்டும்.

எங்கள் கூட்டணி தான் பலமான கூட்டணி என அண்ணாமலை கூறியுள்ளார். அது சரியா? என்பது இன்னும் 4 மாதத்தில் தெரிந்து விடும்.

 

கடந்த 10 ஆண்டுகாலமாக ஒரு வளமான, வலுவான கூட்டணியை திமுக தலைமை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அதில் ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா? என பலரும் ஏங்கி வருகின்றனர். அதற்கு ஒருகாலத்திலும் தமிழக முதல்வர் வழி விடமாட்டார்.

இவ்வாறு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

 

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் மு மதிவாணன் மாமன்ற உறுப்பினர்

தங்கலட்சுமி திருச்சி (மண்டல) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர், உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, திருச்சி மற்றும் கரூர் (இருப்பு) திருச்சி, இதர அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள், கிராம பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.