திருச்சியில் ஓட்டல் முன்பு பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசியதால் பணிநீக்கம் : செய்யப்பட்ட முன்னாள் மேலாளர் ரகளை.
திருச்சியில் ஓட்டல் முன்பு பெண் ஊழியர்களிடம் ஆபாசமாக பேசியதால் பணிநீக்கம் : செய்யப்பட்ட முன்னாள் மேலாளர் ரகளை.
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது.இந்த ஓட்டலில் மேலாளராக ஜீவானந்தம் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார் . அப்போது ஹோட்டலில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் அடிக்கடி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் ஜீவானந்தத்தை ஓட்டல் நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஹோட்டல் முன்பு வந்த ஜீவானந்தம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.இதையடுத்து அந்த ஓட்டலில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர் செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.
அப்புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி ஹோட்டலின் முன்னாள் மேலாளர் ஜீவானந்தம் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

