சத்துக்கள் நிறைந்த கொத்தமல்லி இட்லி
கொத்தமல்லியில் உள்ள கால்சியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும்போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. இதன்மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – 2 கப்,
எண்ணெய் – சிறிது.
அரைக்க…
கொத்தமல்லி – 3/4 கப்,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – 1/2
இஞ்ச் துண்டு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை
அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இட்லி தட்டில் எண்ணெய் தடவி, தேவையான அளவு இட்லி மாவை ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
சூடாக சாம்பாருடன் பரிமாறவும்.