S.I.R பணிகளில் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் திருச்சி மாவட்ட அமைச்சர்களுக்கு திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் கடும் கண்டனம்.
திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள கண்டன. அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
கடந்த 4.11.2025 முதல் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீரமைப்பு (S.I.R) பணிகளில் ஈடுபட்டு வரும் அரசு அதிகாரிகளான DEO, ERO, AERO ஆகியோர்கள் நடுநிலையாகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஆளும் அரசானது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குறிப்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களான BHEL, OFT, HAPP மற்றும் ரயில்வே துறை ஆகியவைகளுக்கு சொந்தமான குடியிருப்புகள் இடிக்கப்பட்ட நிலையில் அந்த குடியிருப்பு பகுதிகளில் வசித்து இடம் பெயர்ந்தவர்களை (Shifted) நீக்கம் செய்யா விடாமல், அவர்களைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று BLO.க்கள் மற்றும் அலுவலர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிய வருகிறது.
இது ஜனநாயக விரோதமானதும், கண்டனதிற்குரியதும் ஆகும்
இது தொடரும் பட்சத்தில் இரு அமைச்சர்களையும் , திமுகவினரையும் கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமியின் அனுமதியும், ஆலோசனையும் பெற்று மாபெரும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும் என்பதை இந்த கண்டன அறிக்கையின் வாயிலாக தெரிவித்து கொள்கிறேன் என தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை தெரிவித்துள்ளார் .

