திருச்சியில் போலி நகையை அடமானம் வைத்த நகை தொழிலாளி மாயம்.

மனைவி போலீசில் புகார்.
திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி (வயது 43) இவர் நகை தொழிலாளி.நிலையில் நகை தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட காரணத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த 30 ஆம் தேதி தன்னிடம் இருந்த ஒரு நகையை எடுத்து அதே பகுதியில் உள்ள நகை கடையில் அடமானம் வைத்து ரூபாய் 40 ஆயிரம் பணத்தை வாங்கி சென்று உள்ளார்.

.இந்த நிலையில் மீண்டும் அடகு கடைக்கு வந்து ஒரு மோதிரத்தை கொடுத்து அடகு வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனைப் பார்த்த அடகு கடையின் உரிமையாளர் ஏற்கனவே நீங்கள் போலீ நகையை வைத்து பணத்தை வாங்கி சென்று உள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.அதற்கு காந்தி அந்த பணத்தை திருப்பி தருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் .
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற காந்தி மீண்டும் விடு திரும்பவில்லை.மாறாக அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சண்முகப்பிரியா பாலக்கரை காவல் நிலைய போலீசில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் பேரில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காந்தியை தேடி வருகின்றனர்.

