Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வரும் தமிழக முதல்வர் கான்வாய் செல்லும் பாதையில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் .மநீம கிஷோர் குமார் வலியுறுத்தல்.

0

'- Advertisement -

திருச்சி வரும் தமிழக முதல்வர் கான்வாய் செல்லும் பாதையில் நடக்கும் சுபநிகழ்ச்சி மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான கிஷோர் குமார் வேண்டுகோள்.

 

நாளை (10.11.2025)ந் தேதி சுபமுகூர்த்தம். மேலும் நாளை தமிழக முதல்வர் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் இல்ல திருமண விழாவிற்கு சோமரசம்பேட்டைக்கு வருகைதர உள்ளார். இப்பகுதி குறுகலான சாலை பகுதி என்பதோடு மக்கள் அடர்த்தியான வணிகவளாகம், கல்லூரிகள் நிறைந்த பகுதி. மேலும் இப்பகுதியில் வயலூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுபமுகூர்த்த நாள் என்பதால் நூற்றுகணக்கான திருமணங்கள் இத்திருத்தளத்தில் நடைபெறும். இதன் காரணமாக இப்பகுதியில் திருமண மண்டபங்களும் அதிகம். இந்த திருமண மண்டபங்கள் அனைத்துமே நாளை (10.11.2025) இதர சுபநிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை திங்கட்கிழமை காலை வேலைகளில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்ல அநேகம் நபர்கள் இச்சாலையை தான் பயன்படுத்துவார்கள்.

எனவே திருச்சி மாநகர காவல் துறை இந்த விபரங்களை அடிப்படையாக கொண்டு முதல்வர் கான்வாய் செல்லும் பாதையில் கூடுதல் பாதுகாப்பை மேம்படுத்தி, இப்பகுதியில் நடக்கும் சுபநிகழ்ச்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த இன்னல்களும் ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்துகிறோம் என கிஷோர் குமார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.