திருச்சி அரசு மருத்துவமனை டிபி வார்டு மருத்துவர் ஆசியுடன் பட்ட பகலிலேயே மருந்துகளை திருடி விற்பனை. படங்களுடன் செய்தி.
தமிழகத்தில் ஏழை மக்கள் பெரிதும் நம்பி இருப்பது அரசு மருத்துவமனைகளை தான் .
பணம் படைத்தவர்களுக்கு ஆங்காங்கே தனியார் மருத்துவமனைகள் பல செயல்பட்டு வருகின்றது ஆனால் சிறு காய்ச்சல் என்றாலும் பாம்பு கடி , தீக்காயம் , விஷம் குடித்தவர்கள் , பிரசவம் . சளி தொல்லை என அனைத்திற்கும் ஏழை மக்கள் உடனடியாக நாடி வருவது அரசு மருத்துவமனையை தான் .
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி மாநகர் மாவட்டம் மட்டுமில்லாமல் சுற்றுவட்டார கிராம பொதுமக்களும் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் . பல நூற்றுக்கணக்கான உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது .

இந்த உயிர் காக்கும் மருந்துகளை டிபி பணி செய்யும் ஊழியர்கள் டிபி வார்டு இன்சார்ஜ் மருத்துவர் முத்துப்பாண்டி ஆசியுடன் ( ஷேர் ) மருந்து மாத்திரைகளை பட்டப்பகல்லையே காலி பிளாஸ்டிக் மற்றும் அட்டப் பெட்டிகளை ஏற்றி செல்வது போன்று மருந்து மாத்திரைகளையும் திருடி சென்று வெளிமார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வருகின்றனர்.

ஏழை எளிய மக்களின் உயிர்காக்கும் மருந்து மாத்திரைகளை இவ்வாறு திருடி விற்கும் நபர்கள் மீது உரிய விசாரணை நடத்தி மருத்துவமனை டீன் நடவடிக்கை எடுப்பாரா அல்லது சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா என்பதே ஏழை எளிய மக்களின் கேள்வி ஆகும் .

