திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாளை
சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்
நடத்தப் போவதாக அறிவிப்பு.
திருச்சி காந்தி மார்க்கெட் சிஐடியு லாரி புக்கிங் ஆபிஸ் தொழிலாளர்கள் யூனியன் ஜி.கே.ராமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ரெகுலர் லாரி செட்களில் சுமார் 350 பேர் சுமைதூக்கும் தொழிலாளர்களாக கடந்த 25 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள் லாரிகளில் வரும் மூட்டைகளை ஏற்றி, இறக்கி விடுவதும் அதற்குறிய கூலி பெற்று கொள்வோம். சில லாரி செட்டுகளில் லாரி வாடகையில் கமிஷன் கூலி என்ற முறையில் வாங்கி கொள்வோம்.
வேலைக்கு ஏற்றவாறு கூலி என்ற நடைமுறையே இருந்து வருகிறது.இந்நிலையில் ஒரு லாரி செட்டில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்து வந்த லாரி செட்டிற்கு லாரிகளை கொண்டு வந்து, வேலை தராமல் திட்டமிட்டு அங்கு வேலை செய்யும் 12 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யும் திட்டத்தோடு வேறு பெயரை மாற்றி லாரிகளை அங்கு கொண்டு சென்று குறைந்த கூலிக்கு வேறு ஆட்களை வைத்து வேலை செய்ய முயற்சித்து வருவதையொட்டி, கடந்த 75 நாட்களாக 12 சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலையிழந்து பசியால் வாடி வருகிறார்கள் .இந்நிலையில் காவல்துறை பரிந்துரை பெயரில் தொழிலார் இணை ஆணையர் தலையிட்டு விசாரனை செய்து 12 தொழிலாளர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என எழுத்து பூர்வமான உத்தரவை பிறபித்திருக்கிறார். உத்தரவு வழங்கப்பட்டு 25 நாட்கள் ஆன பின்பும் அரசு அதிகாரிகள் , காவல் துறை தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்து விட எந்த நடவடிக்கையும் எடுக்காத போக்கை கண்டித்து நாளை (வெள்ளி )காலை 10.30 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சி.ஐ.டி.யுசுமைப் பணி தொழிலாளர்களான ரயில்வே குட்செட், தக்காளி கமிஷன் மண்டி, தக்காளிகை வண்டி, மந்தை, பழக்கடை, டிரான்ஸ்போர்ட், மூங்கில் சவுக்கு, வேர்ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் அவர்கள் குடும்பத்துடன் ஆயிரகணக்கில் பங்கேற்று முற்றுகைபோராட்டத்தை நடத்துகிறோம். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு வேலையிழந்த தொழிலாளர் களுக்கு மீண்டும் வேலை பெற்று தர நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.
இவ்வாறு சிஐடியு லாரி புக்கிங் ஆபிஸ் தொழிலாளர்கள் யூனியன் ஜி.கே.ராமர் தெரிவித்துள்ளார்.

