பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாளை (06.11.2025) வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.
வாளாடி துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நகர், கீழப்பெருங்காவூர், முளப்பதுகுடி, வேலாயுதபுரம், பச்சாம்பேட்டை வளைவு, டி, வளவனூர், மாந்துறை, பிரியாகார்டன், வாளாடி, தண்டாங்கோரை, எசனைக்கோரை, அப்பாத்துறை, தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், செம்பழனி, மேலவாளாடி, புதுக்குடி, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், நெருஞ்சலக்குடி, ஆங்கரை (சரவணாநகர், தேவிநகர், கைலாஸ்நகர்), நெய்குப்பை, ஆர்.வளவனூர், புதூர் உத்தமனூர், பல்லபுரம், வேளாண்கல்லூரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
துறையூர் மற்றும் புத்தனாம்பட்டி துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாப்பட்டி, முத்தையம்பாளையம், நல்லியம்பாளையம்.
புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, சி.எஸ்.ஐ., பெருமாள்மலை, சித்திரப்பட்டி, கொத்தம்பட்டி அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், களிங்கமுடையான்பட்டி, புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், டி.களத்தூர், புலிவலம், தேனூர் பெரகம்பி, எதுமலை, தேவிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

