திருச்சி சுப்ரமணியபுரத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ரவுடி உள்பட இரண்டு பேர் கைது .

திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு பகுதியைச் சேர்ந்தவர் லியாகத் அலி (வயது 54) இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குபுறப்பட்டு சென்றார் அப்போது வழக்கம் போல் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி பூட்டிவிட்டு சென்றார் . பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ஊர் திரும்பினார் அப்போது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது இது பற்றி
லியாகத் அலி கே கே நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் கேகே நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை மேற்கொண்டனர் .
இதில் பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 24) பாலக்கரை பீமநகர் கூனி பஜார் சவேரியார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஜேக்கப் ஸ்டீபன் (வயது 24) ஆகிய இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது .பின்னர் இரண்டு பேரையும் கேகே நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்
கைதான மணிகண்டன் ரவுடி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
பின்னர் திருட்டுப் போன மோட்டார் சைக்கிலும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

