இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கள்ளக்காதலில் ஈடுபட்ட இளம் மனைவி தற்கொலை. உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய 3 பேர் கைது .
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகிலுள்ள மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரேம் சரண். இவரது மனைவி முத்துலட்சுமிக்கு (வயது 26 ) இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்களாகிறது. இன்னும் குழந்தைகள் இல்லை.
தம்பதி இருவருமே மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாகவே முத்துலட்சுமியின் நடத்தையில் பிரேம் சரணுக்கு சந்தேகம் ஏற்பட்டது.. இதுகுறித்து முத்துலட்சுமியிடம் நேரடியாகவே கேட்டுள்ளார்.. அப்போதிருந்தே தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.
தினம் தினம் சண்டை, பிரச்சனையுமாக இருந்ததால் வெறுப்படைந்த முத்துலட்சுமி, அதே பகுதியிலுள்ள தன்னுடைய தாத்தா வீட்டுக்கு வந்துவிட்டார்.. அங்குதான் சமீப நாட்களாகவே வசித்து வந்துள்ளார். ஆனால், நேற்று முன்தினம் காலையில் கடும் மனவேதனைக்கு ஆளான முத்துலட்சுமி, தாத்தா வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் முத்துலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தது.. பிறகு தாத்தா வீட்டில் சோதனையும் மேற்கொண்டது.. அப்போதுதான் தற்கொலைக்கு முன்பு, முத்துலட்சுமி கைப்பட எழுதிய 8 பக்க கடிதத்தை போலீசார் கண்டெடுத்தனர்.
அந்த கடிதத்தில் பல்வேறு விஷயங்களை முத்துலட்சுமி தெரிவித்திருந்த நிலையில், அதை அடிப்படையாக போலீசாரின் விசாரணையும் ஆரம்பமானது.
அதாவது, முத்துலட்சுமிக்கும், பாவூர்சத்திரம் அருகிலுள்ள பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 32) இளைஞருக்கும் நட்பு இருந்துள்ளது.. ஆலங்குளத்தில் உள்ள ஒரு டிராக்டர் ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருபவர் சக்திவேல்.. இவர்கள் இருவருமே இன்ஸ்டாகிராம் மூலம் பழகியிருக்கிறார்கள்..
ஒருகட்டத்தில் இந்த நட்பு, கள்ளக்காதலில் முடிந்துள்ளது.. சக்திவேலும், முத்துலட்சுமியும் தனிமையில் உல்லாசமாகவும் இருந்திருக்கிறார்கள்.. அப்போது முத்துலட்சுமிக்கு தெரியாமல், அதனை வீடியோ, போட்டோக்களாக எடுத்து வைத்து கொண்டாராம் சக்திவேல்.
இதனிடையே, முத்துலட்சுமியின் தவறான பழக்கவழக்கம், அவரது உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது.. மேலும் முத்துலட்சுமியை கண்டித்ததுடன், சக்திவேலுவுடன் பழகுவதையும் நிறுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இதனால் முத்துலட்சுமியும் கள்ளக்காதலன் சக்திவேலுவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.. இது சக்திவேலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடனே, உல்லாச வீடியோ, போட்டோக்களை முத்துலட்சுமியிடம் காட்டி, தனக்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்.
முத்துலட்சுமியும் உறவினர்களுக்கு பயந்து, தன்னிடமிருந்த ரூ.4 லட்சத்தை தந்துள்ளனர்.. ஆனால் சக்திவேல், இன்னும் ஒரு லட்சம் பணம் கேட்டு முத்துலட்சுமியை மிரட்டி வந்தாராம். அதற்கு மேல் பணம் தர முடியாத முத்துலட்சுமி தன்னுடைய பெற்றோரிடம் இந்த விஷயத்தை சொல்லி உள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக ஆலங்குளம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சக்திவேலை பிடித்து விசாரணை நடத்தி, அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர்.. அதில், முத்துலட்சுமியுடன் உல்லாசமாக இருந்த போட்டோ, வீடியோக்களை போலீசார் அழித்து விட்டனர்.
ஆனால், அந்த உல்லாச வீடியோக்கள், போட்டோக்களையும், தன்னுடைய மனைவியுன் செல்போனில் சக்திவேல் மறைத்து வைத்திருக்கிறார்.. தன்னை போலீசில் மாட்டி விட்டதால், ஆத்திரமடைந்த சக்திவேல், மறைத்து வைத்திருந்த முத்துலட்சுமியின் வீடியோ, போட்டோக்களை, தன்னுடைய ஒர்க்ஷாப்பிற்கு அடிக்கடி வரும் முத்துராஜ் (வயது 36) என்பவருக்கு ஷேர் செய்துள்ளார்.
உடனே முத்துராஜும், அவரது நண்பர் முருகேசனும் (வயது 42) சேர்ந்து, முத்துலட்சுமியை மிரட்டியிருக்கிறார்கள்.. தங்கள் ஆசைக்கு இணங்காவிட்டால், சோஷியல் மீடியாவில் வீடியோவை அப்லோடு செய்துவிடுவோம் என்று மிரட்டினார்கள்.. ஆனால் முத்துலட்சுமி அவர்களின் மிரட்டலுக்கு பணியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த முத்துராஜ், முருகேசன் இருவரும், தங்களிடமிருந்த உல்லாச வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டனர்.. இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது..
இந்த விஷயம் தெரிந்து அதிர்ச்சியடைந்த முத்துலட்சுமி, தாத்தா வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் உறுதியானது..
இதையடுத்து முத்துலட்சுமியின் தற்கொலைக்கு காரணமான சக்திவேல், முத்துராஜ், முருகேசன் ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தில் சக்திவேலின் மனைவி செல்போனிலிருந்து வீடியோ வெளியானதால், வீடியோவை சக்திவேல் மனைவிதான் பரப்பியதாக அவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

