தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க 44 ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.
தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்க
கொடியேற்று விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.
திரளான நிர்வாகிகள் பங்கேற்பு.
தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்கத்தின் 44 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் இயக்கக் கொடியேற்று விழா
திருச்சி மலைக்கோட்டையில் இன்று நடைபெற்றது.
மாநில மகளிர் அணி துணை செயலாளர் சாந்தி சொருப மேரி இயக்கத்தின் கொடியேற்றி வைத்தார்.
திருச்சி மாவட்ட செயலாளர் லா. அந்தோணி எட்வர்ட் ராஜ் இயக்க உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.இயக்க வரலாற்றை மருங்காபுரி வட்டாரசெயலாளர் கு. இளங்கோ விரிவாக எடுத்துரைத்தார்.

தமிழக ஆசிரியர் கூட்டணியின் இயக்க மாண்பினை மாவட்ட துணை தலைவர் ஏ.ஆர். சிராஜுதின் எடுத்து கூறினார்.
நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் வி. சகாய செல்வி, மாவட்ட துணை செயலாளர் பிரிட்டோ பாண்டியன், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் தாமஸ் ராக்லேண்ட், மாவட்ட பொருளாளர் மணிகண்டம் மை. ஆரோக்கியராஜ், அந்தநல்லூர் வட்டார மகளிர் அணி செயலாளர் ஆ. சகாயமேரி சந்திரா, ஆ. ராணி , அந்தநல்லூர் வட்டார செயற்குழு உறுப்பினர் ப. கீதா, திருச்சி நகர வட்டார செயலாளர் நிசார் அஹமத் மற்றும் துணைச் செயலாளர் ரெங்கபாஷ்யம் உறுப்பினர்கள் நாகராஜ், முகமது ஃபஹீம் ஷெரிஃப், சரண்யா, உமா, சகாயராணி, மேரி செரோபியா, மோகனா, ஷியாமளா, மரியம் ஜமீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் திருச்சி மாநகர கிளை தலைவர் ஜீவானந்தன் நன்றி கூறினார்.

