வார்த்தையா?, வாக்கா ? முடிவு செய்யுங்கள். ரஜினி ரசிகர்கள் போஸ்டர்களால் பரபரப்பு
வார்த்தையா?, வாக்கா ? முடிவு செய்யுங்கள். ரஜினி ரசிகர்கள் போஸ்டர்களால் பரபரப்பு
மதுரை மாவட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்களில் வரும் வார்த்தைகளான ”காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் வார்த்தையா! வாக்கா!! முடிவு செய்யுங்கள் முடிவு சொல்லுங்கள் தலைவா” என்ற வாசகங்களும் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு.
அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த அறிவித்ததைத் தொடர்ந்து அண்மையில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கை குறித்து தனது விளக்கத்தை சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், அந்த அறிக்கை தன்னுடையது அல்ல எனவும், ஆனால் அந்த அறிக்கையில் தனது உடல்நிலை குறித்து குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலமாகவும் போஸ்டர்கள் மூலமாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ”காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் வார்த்தையா! வாக்கா!! முடிவு செய்யுங்கள் முடிவு சொல்லுங்கள் தலைவா… மாற்றத்தை எதிர்பார்க்கும் தமிழக மக்கள்” என்ற வாசகங்களுடன் மதுரை மாநகர் முழுவதும் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.