திருச்சியில் தீபாவளி கொண்டாட்டம்: எங்கு பார்த்தாலும் கடும் புகை மூட்டம் . பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி.
திருச்சியில் தீபாவளி கொண்டாட்டம்:
எங்கு பார்த்தாலும்
கடும் புகை மூட்டம் .
பொதுமக்கள்,
வாகன ஓட்டிகள்
கடும் அவதி.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காலை 6-7 மணிக்கும் மற்றும் இரவு 7-8 மணிக்கும் பட்டாசு வெடிக்க உத்தரவிட்டிருந்தது.
அதன்படி திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் சிறுவர் சிறுமியர்கள் கையில் மத்தாப்பு வைத்து சுத்தியும், சங்கு சக்கரம் மற்றும் ராக்கெட் உள்ளிட்டவைகளை வெடித்தும் மகிழ்ச்சி பொங்க ஹாப்பி தீபாவளி என முழக்கமிட்டு கொண்டாடினார்கள்.
இதேபோல மாவட்டத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை திருவெறும்பூர் ,முசிறி ,லால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், தொட்டியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் உற்சாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்கள்.
பொதுமக்கள் அதிகமாக பட்டாசுகளை வெடித்த காரணத்தால்
திருச்சி மாநகரம் முழுவதும் கடும் புகைமூட்டம் நிலவியது.
நகரின் பல பகுதிகளில் காற்றில் மாசு அளவு அதிகரித்ததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.தீபாவளி பண்டிகை காரணமாக கடந்த இரு நாட்களாக பொதுமக்கள் பட்டாசு, வெடி வெடிப்பதால் காற்று தரம் குறைந்து, புகை மூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக சமயபுரம், திருவெறும்பூர் , லால்குடி, கண்டோன்மெண்ட் காந்தி மார்க்கெட், புறநகர் பகுதிகளில் பார்வை தெளிவாக காண முடியாத அளவுக்கு புகை மூட்டம் காணப்பட்டது.
இந்த புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டது. பாவனா ஓட்டிகள் மின் விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர் .மேலும் சிறுவர், முதியோர், ஆஸ்துமா நோயாளிகள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.