Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்று இரவுக்குள் புஸ்ஸி ஆனந்த் கைது . போலீசார் தீவிரம்.

0

'- Advertisement -

கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

 

கரூர் ஏ.டி.எஸ்.பி. பிரேமானந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

கரூரில் நடைபெற்ற அரசியல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதில், “அரசியல் பலத்தை காட்டும் நோக்கில் கூட்டம் திட்டமிட்டு 4 மணி நேரம் தாமதமாக துவக்கப்பட்டது. தொண்டர்கள் மரங்கள் மற்றும் கடைகள் மீது ஏறி அமர்ந்தனர். இதில் மரக்கிளைகள் முறிந்து கீழே நின்றவர்கள்மீது விழுந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அனைத்து எச்சரிக்கைகளையும் புறக்கணித்ததாக, ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மீது குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் காத்திருத்தல், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளின் இல்லாமை, கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அழுத்தம் ஆகியவற்றால் மக்கள் உடல் நிலை சோர்ந்து கீழே விழுந்ததாகவும், அவர்கள் மிதிபாடுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாகவும் எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.

 

இந்த நிலையில்தான் கரூர் விஜய் பிரச்சாரத்தில் 41 பேர் பலியான வழக்கில் புஸ்ஸி ஆனந்த் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

 

ஏற்கனவே கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தவெக வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு பின் சதி வேலை நடந்திருப்பதாக தவெக தரப்பு தெரிவித்துள்ளது. கரூர் மாவட்டம், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நீதிபதிகள் எம். தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் அடங்கிய தசரா விடுமுறைக் கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். தமிழக வெற்றி கழகத்தின் வழக்கறிஞர் எஸ். அறிவழகன், செப்டம்பர் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை நீதிபதி தண்டபாணி இல்லத்தில் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணாமலேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது வழக்கறிஞர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த துயர சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்த நீதிபதி தண்டபாணி, இது ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வு எனக் குறிப்பிட்டார்.

 

அதைத் தொடர்ந்து, நீதிபதி தண்டபாணி, நீதிபதி ஜோதிராமனுடன் கலந்துரையாடி, முறைப்படி மனு தாக்கல் செய்யப்பட்டு, எண் அளிக்கப்பட்டால், செப்டம்பர் 29, 2025 திங்கட்கிழமை இன்று பிற்பகல் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டனர். ஆனால் இன்று விசாரிக்கப்படாத காரணத்தால் நாளை விசாரிக்கப்படலாம்.

 

அதோடு தவெகவினர் இது தொடர்பான முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு முன்னால் சினிமா பாணியில் போலீசாரை குழப்புவதற்காக சேலத்தில் உள்ள நம்பிக்கையான ஒரு நண்பரிடம் செல்போனை கொடுத்துவிட்டு தலைமறைவாக உள்ள புஸ்ஸி ஆனந்த் இன்று இரவுக்குள் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.