திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி இதழ் வெளியீட்டு விழா.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிஆங்கில முதுகலை மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பாக ‘ நேமோசின் நேக்ஸஸ்’ என்ற ஆராய்ச்சி இதழ் வெளியிப்பட்டது. .
பெல் நிறுவன இயக்குநர் ராஜா முஹம்மது முதல் இதழை வெளியிட கல்லூரி முதல்வர் ௧.அங்கம்மான் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
ஆங்கிலத்தறைத் தலைவர் மற்றும் தேர்வு நெறியாளர் முனைவர் து.தனலட்சுமி இதழ் கடந்துவந்த பாதையையும் இதன் சிறப்புகளையும் எடுத்துரைது நோக்கவுரை ஆற்றினார்.
துருக்கி நாட்டில் உள்ள அட்லீம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் கோக்சன் ஆராஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆங்கில ஆராய்ச்சி உலகளவில் ஏற்படுத்தும் மாற்றம் மற்றும் தேவை இந்தியர்கள் அதற்காக ஆற்றிவரும் பெரும் பங்கு குறித்தும் பெரியார் கல்லூரி பேராசிரியர்கள் ஆராய்ச்சித் துறையில் சிறப்பாக செயல்பட்டு மணவர்களையும் நேர்பட வழி நடத்துகின்றனர் என்றும் பெரியார் கல்லூரி ஆராய்ச்சித் துறையை உலகமே உற்று நோக்குகிறது என்று சிறப்புரையாற்றினார்.
தமிழாய்வுத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கா.வாசுதேவன்,கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர். பி.நடே சன், பெரியார் கல்லூரி ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் முனைவர். வில்லவன் மற்றும் முகமது நாசர் வாழ்த்துரை வழங்கினார்கள்,
ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். அ. நோபில் ஜெபக்குமார் நன்றியுறை வழங்க நிகழ்வு இனிதே நிறைவிடந்தது