கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்த நிலையில் 37 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
இறந்தவர்கள் யார்யார் என்ற விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கரூரில் தவெக தலைவர் விஜய் நேற்றைய தினம் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். பகல் 12 மணிக்கு வரவேண்டிய அவர் இரவு 8 மணிக்கு வந்தடைந்தார். அதாவது விஜய்யை பார்க்க காலை முதலே கூட்டம் கூடியது.
இந்த நிலையில் 100 அடி குறுகலான சாலையில் 60 அடி விஜய்யின் பேருந்து நின்றதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். இதனால் அவர்களால் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
ஒரு குழந்தையை காணவில்லை என தெரிவித்ததும் அங்கிருந்த கூட்டம் சிதறி ஓடியது. இதனாலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதுவரை 39 பேர் உயிரிழந்துவிட்டனர்.
அவர்களில் பெண் குழந்தைகள் 5 பேர், ஆண் குழந்தைகள் 4 பேர், பெண்கள் 17 பேர், ஆண்கள் 13 பேர் என 39 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்களின் பல உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பதால் சாவு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது .
இறந்தவர்களின் விவரங்களை பார்க்கலாம்:
1.கரூர் தாமரைக்கண்ணன் (வயது 25)
2.ஹேமலதா (28)
3.சாய்லட்சணா (8)
4.சாய் ஜீவா (4)
5.சுகன்யா (33)
6.ஆகாஷ் (23)
7.தனுஷ்குமார் (24)
8.வடிவழகன் (54)
9.ரேவதி (52)
10.சந்திரா (40)
11.குருவிஷ்ணு (2)
12.ரமேஷ் (32)
13.சனுஜ் (13)
14.ரவிகிருஷ்ணன் (32)
15.பிரியதர்ஷினி (35)
16.தரணிகா (14)
17.பழனியம்மாள் (11)
18.கோகிலா (14)
19.மண்மங்கலம் மகேஷ்வரி (45)
20.அரவக்குறிச்சி அஜிதா (21)
21.கரூர் மாலதி (36)
22.கரூர் சுமதி (50)
23.காங்கேயம் மணிகண்டன் (33)
24.ஈரோடு சதீஷ்குமார் (34)
25.கரூர் கிருத்திக்யாதவ் (7)
26.சேலம் ஆனந்த் (26)
27.குஜியம்பாறை சங்கர்கணேஷ் (45)
28.கரூர் விஜயராணி (42)
29.காங்கேயம் கோகுல பிரியா (28)
30.ஒட்டன்சத்திரம் பாத்திமாபானு (29)
31.கரூர் கிஷோர் (17)
32.கரூர் ஜெயா (55)
33.கரூர் அருக்காணி (60)
34.புகளூர் ஜெயந்தி (43)
கரூரில் மட்டும் 27 பேர் பலியாகிவிட்டனர். மீதமுள்ள 5 பேரின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றது.