திருச்சியில் நாளை 13 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை .
திருச்சியில் நாளை 13 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு
முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார்
மாலை அணிவித்து மரியாதை .
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ,மாநகராட்சி கவுன்சிலர் வி. ஜவஹர்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் துணை தலைவரும், திருச்சியில் 4 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அனைவரிடமும் அன்புடன் பழகி, மக்கள் பணியாற்றி, நம் அனைவரின் மனதிலும் நிலைத்து வாழும் முன்னாள் எம்.பி.,எல்.
அடைக்கலராஜின் 13 ம் ஆண்டு நினைவு நாள் நாளை (சனிக்கிழமை) வருகிறது.
அன்றைய தினம் காலை 10:30 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ஜென்னி பிளாசாவில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினர் தொழிலதிபர் ஏ. ஜோசப் லூயிஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
ஆகவே இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட ,கோட்ட, வட்டார ,நகர ,வார்டு நிர்வாகிகள் மற்றும் கட்சியின் துணை அமைப்பு நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மரியாதை செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்