வீடு இடிந்து விழுந்த இறந்த 12 வயது குழந்தையின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு நிதி உதவி அளித்து ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சியில் மழையினால் வீடு இடிந்து விழுந்த இறந்த
12 வயது குழந்தையின் இல்லத்திற்கு சென்று பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைக்கோட்டை பகுதி 17 வது வார்டு சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய பகுதியில் கடந்த (6.9.25) அன்று பெய்த கனமழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி சிவா மற்றும் சுகந்தி தம்பதியர்களின் மகள்
12_ வயது கார்த்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை யொட்டி இன்று அவருடைய இல்லம் சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து நிதியுதவி அளித்தார்.
உடன் மாநகரக் செயலாளர் மு மதிவாணன் பகுதிச் செயலாளர் ஆர்.ஜி.பாபு, வட்ட செயலாளர் மனோகர்,
மாமன்ற உறுப்பினர் , மாவட்ட கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா,பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் புஷ்பராணி,மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.