பொது மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்வாரிய தரப்பில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
இது தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் நாளை (23.09.2025) செவ்வாய்க்கிழமை பல்வேறு பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.
மின் தடை அறிவிப்பு: திருச்சி துணை மின் நிலையத்தில் நாளை 23.09.2025 (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதன் காரணமாக மத்திய பஸ் நிலையம், வ.உ.சி.ரோடு, கலெக்டர் அலுவலக ரோடு பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரியமிளகு பாறை, ஜங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, கண்டித்தெரு, கான்வெண்ட் ரோடு, பறவைகள் சாலை, பாரதியார் சாலை, மேலப்புதூர், குட்செட் ரோடு, புதுக்கோட்டை ரோடு, ஜங்ஷன் ரெயில்வே மேம்பாலம் பகுதி, ஜென்னிபிளாசா பகுதி, தலைமை தபால் நிலைய பகுதி, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி ஆகிய இடங்கள்.
மேலும், உறையூர் பகுதிகளான மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலஜாபஜார், பாண்டமங்கலம், வயலூர் ரோடு, கனராபேங்க் காலனி, குமரன் நகர், சின்டிகேட் பேங்க் காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாசநகர், ராமலிங்கநகர், கீதா நகர், அம்மையப்ப பிள்ளை நகர், எம்.எம்.நகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகர், சோழங்கநல்லுர், உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு, நாச்சியார் கோவில், பொன்னகர், கருமண்டபம் இருபுறமும், செல்வநகர், ஆர்.எம்.எஸ் காலனி, தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் ஆகிய பகுதிகள்.
மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.