இம்மானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு நாளை முன்னிட்டு.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கட்சி அலுவலகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்..ராஜமணிகண்டன்,, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் காசிராமன் , முன்னாள் அண்ணா தொழிற்சங்க முன்னோடி சந்திரமோகன், துவாக்குடி நகர துணை செயலாளர் கணபதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பிரசன்ன குமார், புள்ளம்பாடி பேரூர் நிர்வாகி ரவிச்சந்திரன், திருவெறும்பூர் ஒன்றிய நிர்வாகி நந்தினி, அரியமங்கலம் அசோக் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.