Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி தென்னூரில் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பிசியோதெரபிஸ்ட் கைது

0

'- Advertisement -

திருச்சி தென்னூரில்

Ad banner

சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணிடம் சில்மிஷம்; பிசியோதெரபிஸ்ட் கைது.

 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த காதர்பாவா (வயது 49), திருச்சி தென்னூர் பஜார் பகுதியில் பிசியோதெரபி சிகிச்சை மையம் நடத்தி வருகிறார்.

 

நேற்று இரவு, உறையூரை சேர்ந்த 20 வயது இளம்பெண் காலில் ஏற்பட்ட சுளுக்குக்காக இந்த சிகிச்சை மையத்துக்கு சென்று உள்ளார். அப்போது காதர் பாவா சிகிச்சை அளிப்பது போல் அந்த பெண்ணிடம் சில்மிசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால்

அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டு உள்ளார்.

 

 

உடனே வெளியே நின்று இருந்த அவரது உறவினர்கள் உள்ளே ஓடி வந்து இளம் பெண்ணை மீட்டனர்.

 

மேலும் பிசியோதெரபிஸ்ட் காதர் பாவாவை

அடித்து உதைத்து

தில்லைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

பின்னர் தில்லை நகர் காவல் நிலைய போலீசார்

வழக்கு பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை சட்ட பிரிவின் கீழ் காதர் பாபாவை கைது செய்தனர்.

 

 

இளம் பெண்ணிடம் மருத்துவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.