துறையூரில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள்’

துறையூரை அடுத்த முருகர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சரண்ராஜ் (வயது 23), விக்கி என்ற விக்னேஷ் (வயது 20). இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மோட் டார் சைக்கிளில் துறையூருக்கு சென்றனர். அப்போது துறையூரில் இருந்து ஆத்தூர் நோக்கி கிரேனும், மோட்டார் சைக்கிளுக்கு முன்பு டிப்பர் லாரியும் சென்றது. இந்த நிலை.யில் லாரியை சரண்ராஜ் முந்தி சென்றார்.
இதில்
கட்டுப்பாட்டை இழந்த மோட் டார் சைக்கிள் லாரியில் எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த சம்பவத்தில் மோட் டார் சைக்கிளில் இருந்து சரண்ராஜ், விக்னேஷ் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், விக்கி என்கிற விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்

சரண் ராஜ்
பலத்த காயம் அடைந்த சரண்ராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு
ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விக்கி
ஆனால் சரண்ராஜ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

