பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சியில் கடந்த மாமன்ற கூட்டத்தில் மேயருக்கு எதிராக ஆளும் கட்சி கவுன்சிலர்களில் பாதி பேர் வெளிநடப்பு செய்தனர்
நேற்று நடந்த மாமன்ற கூட்டத்திலும் மேயருக்கு எதிராக வெளிநடப்பு மற்றும் மேயர் முன்பு தர்ணா போராட்டத்தில் ஆளும்கட்சி கவுன்சிலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் கோஷ்டி மோதலுக்கு ஏற்ற இடம் மாமன்ற கூட்டமா?
மக்கள் பிரச்சனைகளை பேச வேண்டிய இடத்தில் உட்கட்சி பூசலை காட்டி மாமன்ற கூட்டத்தை மனமகிழ் மன்றமாக மாற்றி வருகிறது திமுக. என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் .