திருச்சியில் மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வீடு வீடாக சென்று வழங்கினார்.
தாயுமானவர் திட்டத்தின் கீழ்
திருச்சியில் மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வீடு வீடாக சென்று வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் மகத்தான திட்டமான “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” சென்னையில் நேற்று தொடங்கி வைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திருச்சி மாவட்டத்தில் உள்ள R 689 தென்சென்னை மின் நிறுவன ஊழியர்கள் கூட்டுறவு பண்டகசாலைக்கு உட்பட்ட திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனி பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் தாயுமானவர் திட்டத்தை தலைமையேற்று தொடங்கி வைத்து அப்பகுதியில் வசிக்கும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சார்பதிவாளர், செயலாட்சியர் அறிவழகன், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.