Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

லால்குடி அருகே விபத்து கார் – இருசக்கர வாகனம் மோதி விபத்து. 3 பேர் பலி. அமைச்சர் கே என் நேரு நேரில் ஆறுதல்

0

'- Advertisement -

லால்குடி அருகே விபத்து

கார் – இருசக்கர வாகனம் மோதி விபத்து. 3 பேர் பலி. அமைச்சர் கே என் நேரு நேரில் ஆறுதல் .

 

திருச்சி மாவட்டம் லால்குடி முஸ்லிம் தெரு தேர்முட்டி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகன் சந்தோஷ்.

எலெக்ட்ரிசியன்.இவருக்கு சவுதியில் வேலை கிடைத்து உள்ளது.

 

இதையடுத்து இன்று இவர் துபாய் செல்வதற்காக ஒரு காரில் திருச்சி விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.

இந்தக் காரில் அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர். மற்றொரு காரில் அவரது நண்பர்களான லால்குடி நன்னிலம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (வயது 20), லால்குடி முஸ்லிம் தெரு பகுதியைச் சேர்ந்த சாதிக் (வயது 20) உள்ளிட்ட

8 பேர் பயணம் செய்தனர். இரண்டு கார்களும் தனித்தனியே புறப்பட்ட திருச்சி நோக்கி வந்து கொண்டே இருந்தது.

சந்தோஷ் குடும்பத்தினர் சென்ற கார் முதலில் வேகமாக சென்று விட்டது இதனை பின் தொடர்ந்து

நண்பர்கள்

பயணம் செய்த கார் லால்குடி திருச்சி மெயின் ரோட்டில் சரஸ்வதி கல்லூரி முன்பு வந்த போது திடீரென்று விபத்தில் சிக்கியது. வேகமாக சென்ற

காரும்,அப்பொழுது அந்த ரோட்டில் எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்குள்ள மரத்தில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே

பரிதாபமாக இறந்தார்.

பின்னர் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சாதிக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த லால்குடி பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (வயது 56) என்பவரும் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர்கள் அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்தில் படுகாயம் அடைந்த ஆறு பேரில் இரண்டு பேரின் நிலைமை கவலை கிடமாக உள்ளது.

 

இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து லால்குடி பகுதியை சேர்ந்த ஏராளமான வாலிபர்கள், மற்றும் விபத்தில் சிக்கிய வாலிபர்களின்

பெற்றோர்கள், உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர்.இறந்து போன மூன்று பேரில் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இதனால் திருச்சி அரசு மருத்துவமனை பரபரப்பாக காணப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து லால்குடி போலீசார்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

.வெளிநாடு செல்லும் நண்பரை வழி அனுப்ப சென்ற வாலிபர்கள் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

விபத்தில் மூன்று பேர் இறந்ததை அறிந்த அமைச்சர் கே.என். நேரு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சென்று இறந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி , அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.