திருச்சி உய்யகொண்டான் திருமலை, உறையூரில்
கஞ்சா விற்பனை செய்த
3 வாலிபர்கள் கைது .
கஞ்சா . பொட்டலங்கள் பறிமுதல்.
திருச்சி உய்யகொண்டான் திருமலை, உறையூர் காந்திபுரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் அந்தந்த பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கஞ்சா விற்றதாக வயலூர் ரோடு பகுதியைச் சேர்ந்த கமுருதின், உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த துரைராஜ், தில்லை நகரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய மூன்று வாலிபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் .