சென்னை புழல் சிறையில், வெளிநாட்டு கைதி மோனிகா என்பவர் தன்னை தாக்கியதாகவும், அங்கு லெஸ்பியன் அட்டகாசம் அதிகரித்து விட்டதாகவும் பெண் காவலர் சரஸ்வதி தெரிவித்திருக்கிறார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதி, மோனிகா அங்கு பணியில் இருந்த பெண் காவலரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தக்கப்பட்ட பெண் காவலர் சரஸ்வதி இது குறித்து பேசுகையில், புழல் சிறையில் வெளிநாட்டு சிறை வாசிகளால் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்திருந்தார். மேலும், சிறையில் தவறு செய்து விட்டு இருப்பவர்கள் சுதந்திரமாக இருப்பதாகவும், இங்கு வேலை பார்ப்பவர்களுக்குதான் சிறை வாசம் போல இருப்பதாகவும் கூறினார். இவை அனைத்திற்கும் சிறைத்துறை தலைவர்தான் காரணம் என்று கூறிய அவர், அந்த வெளிநாட்டு கைதிக்கு அவர் முழுக்க முழுக்க ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார்.
புழல் சிறையில் இருக்கும் வெளிநாட்டு கைதிகள், வெளிநாட்டு உணவுகளோடு சேர்த்து, உள்நாட்டு உணவுகளையும் சாப்பிடுவதாகாந்த பெண் காவலர் கூறுகிறார். சிறைக்குள், தங்களுக்கென்று தனியாக கூடாரம் அமைத்து அதில் சேலைகளை முறுக்கி, மெத்தை போல் செய்து படுத்துக்கொள்கின்றனர் என்றும் கூறியிருக்கிறார். கூடவே, இரவில் இதில் சிலர் நிர்வாணமாக கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்குவதாகவும்,சுற்றித்திரிவதுமாக இருப்பதாக கூறுகிறார். இவரை பார்த்து சில தமிழ்நாட்டு கைதிகளும் செய்வதாகவும் அவர்களை அப்படி செய்ய வேண்டாம் என்று கூறினால், “அவர்களை அடக்க மாடேங்கிறீர்கள், எங்களை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?” என்று கேட்பதாகவும் அவர் கூறுகிறார்.
அது மட்டுமன்றி, சிறைக்குள் பியூட்டி பார்லர் வசதி இருப்பதாகவும், புருவம் ட்ரிம் செய்கிறேன் என்று கூறிக்கொண்டு வெளிநாட்டு கைதி மோனிகா அடிக்கடி வெளியில் வந்து சுற்றி திரிவதாகவும் சரஸ்வதி குற்றம் சாட்டுகிறார்.
நைஜீரியா நாட்டை சேர்ந்த மோனிகாதான், இந்த கைதிகளின் அட்டூழியத்திற்கெல்லாம் காரணமென்று கூறியிருக்கிறார் சரஸ்வதி. மேலும், அவரை கண்டித்ததற்கு “உன்னால் என்ன பண்ண முடியும்? கூடதலா இரண்டு வாய்தாவுக்கு வர வேண்டி இருக்கும். அவ்வளவுதானே?என்று அசால்டாக கேட்கிறாராம். இதுவரை அந்த சிறைக்கைதி மோனிகா, 4 பெண் காவலர்களை தாக்கியிருப்பதாக அந்த பெண் காவலர் கூறுகிறார். இதில், பாதிக்கப்பட்ட ஒரு பெண் காவலர் புகார் கொடுத்ததாகவும், கடைசி வரை அதற்காக உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட வில்லை என்றும் கூறியிருக்கிறார். இதனால் அந்த பெண் காவலர் வேலையே வேண்டாம் என எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இப்படி பிரச்சனைக்குரிய வெளிநாட்டு கைதிகளை தனியாக சிறையில் வைத்து பராமரிக்க வேண்டும் என்று அந்த பெண் காவலர் கோரிக்கை விடுத்துள்ளார். இவர்களுக்கு சிறை துறை தலைவர் மகேஸ்வர் தயாள் ஆதரவு தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் அப்பெண் காவலர் கூறியிருக்கிறார்.