நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, மருத்துவம் முக்கியம்:
விடா முயற்சியே
வெற்றிக்கு வழி வகுக்கும்.திருச்சி நூல் வெளியீட்டு விழாவில் டாக்டர் அலீம் பேச்சு
திருச்சி சிரா இலக்கிய கழகம் சார்பில் எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி எழுதிய பறை சிறுகதை நூல் வெளியீட்டு விழா திருச்சி தமிழ் சங்கத்தில் நடந்தது.திருக்குறள் முருகானந்தம் தலைமை தாங்கினார். ஸ்கோப் அறக்கட்டளை தலைவர் சுப்புராமன், சிரா இலக்கிய கழக துணைத் தலைவர் ஸ்ரீ ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் தங்கப்பிரகாசி வரவேற்றார்.
காயத்ரி மகளிர் மன்றத்தின் தலைவர் ராஜேஸ்வரி சுப்புராமன் தமிழிசை பாடல் பாடினார்.செல்வி அத்விகா பாலாஜி பரதம் ஆடினார்.
அருட்தந்தை ஜோசப் அருள்ராஜ்,திருச்சி அரசு மருத்துவமனை முன்னாள் துணை முதல்வர் மூளை நரம்பியல் நிபுணர் டாக்டர் அலீம் ஆகியோர் நூலை வெளியிட முதல் பிரதியை தமிழ் சங்கத்தின் அமைச்சர் உதயகுமார் பெற்றுக்கொண்டார்.
விழாவில் டாக்டர் அலீம் பேசுகையில்,
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, மருத்துவம் முக்கியம்.நூல்கள் வாசிப்பு மற்றும் கருத்துக்கள் எழுத்தாளர்களுக்கு புதிய சிந்தனையை வித்திடும்.இதுபோல எழுத்தாளர்களின் சிந்தனையும், செயலும் இளம் தலைமுறைக்கு வித்திடும்.இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை இருந்தால் எழுத்தாளர் பணி சிறப்பிக்கும். சிறந்த எழுத்தாளராக விடாமுயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.
விழாவில் ராயல் லயன் சங்க சாசன தலைவர் முகமது சபி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முனைவர் பசுபதி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி பேராசிரியர் சலேத்,சிரா இலக்கிய கழகம் செயற்குழு உறுப்பினர்கள் அனிதா டேவிட்,பேச்சாளர் சுஜாதா சஞ்சய் குமார், வழக்கறிஞர் கோபால்சாமி, பேச்சாளர் ஹரிஹர வீரப்பன்,
ஆலோசகர் நொச்சியம் சண்முகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.முடிவில் சிரா இலக்கியக் கழக தலைவர் எழுத்தாளர் கேத்தரின் ஆரோக்கியசாமி ஏற்புரையாற்றினார்.முடிவில் ஓய்வு பெற்ற ரயில்வே துறை பார்த்திப ஜெயசீலன் நன்றி கூறினார்.