insta காதல் . 2 குழந்தைகளின் இளம் தாயுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்களை அனுப்பி மிரட்டல் விடுத்த இளைஞர் கைது.
இன்ஸ்டாகிராமில் பழகிய இளம் பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டு, அவருடன் உல்லாசம் அனுபவித்த இளைஞர், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி மிரட்டல் விடுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சலவன்பேட்டை என்ற பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த இளம் பெண்ணிற்கு திருப்பத்தூர் மாவட்டம் பெரிய மூக்கனூர் என்ற பகுதியைச் சேர்ந்த ராகவன் (வயது 27) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரின் இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். அப்போது அந்த இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை ராகவன் தனது செல்போனில் பதிவு செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வேலூருக்கு வந்த ராகவன் இளம் பெண்ணை நேரில் சந்தித்து பேசிய போது உனது கணவர் குழந்தைகளை விட்டுவிட்டு என்னுடன் வந்துவிடு என கூறியிருக்கிறார். ராகவன் பலமுறை இதனை வலியுறுத்தியும் அந்த இளம் பெண் கணவரை விட்டு வர மறுத்திருக்கிறார்.
இதனால் அந்த இளம் பெண் மீது ஆத்திரமடைந்த ராகவன், இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த படங்களை கள்ளக்காதலியான அந்த பெண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி இருக்கிறார் பின்னர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ராகவன், என்னுடன் நீ வரவில்லை என்றால் நாம் இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி இருக்கிறார். இதனால் அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இனிமேலும் வீட்டில் மறைத்தால் இந்த விவகாரம் பூதாகரமாகிவிடும் என உணர்ந்த அந்தப் பெண் நடந்த சம்பவங்கள் பற்றி தனது கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து அந்தப் பெண் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்குச் சென்று ராகவன் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் திருப்பத்தூரைச் சேர்ந்த ராகவனை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இதுபோல் முகம் தெரியாத நபர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு இளசுகள் வழிதவறி செல்லும் சம்பவங்களும், தங்களது வாழ்க்கையை, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையிலான சம்பவங்களும் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே குறிப்பாக பெண்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது..!