பெற்றோரிடம் சண்டை, மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
போலீசார் விசாரணை
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் இவரது மகன் ஜனார்த்தன் (வயது 21).இவர் திருச்சியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு உடற்கல்வி படித்து வந்தார் .
இந்நிலையில் கடந்த 27ந்தேதி அவர் வீட்டில் அறையில் தூங்க சென்றார். பிறகு நீண்ட நேரம் ஆகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் குடும்பத்தினர் அறைக்கு சென்று பார்த்தபோது ஜனார்த்தன் மின்விசிறி கொக்கியில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய ஜனார்த்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஜனார்த்தன் கடந்த இரண்டு வருடங்களாக தனது பெற்றோருடன் சண்டையிட்டு பேசாமல் இருந்து வந்ததாகவும், இதனால் மன உளைச்சலில் அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிய வந்தது.