தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக அரசு தெரிவித்துள்ளது.
பற்றாக்குறையை தொடர்ந்து, ஜுன் 3 ம் தேதி முதல் 6ம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியிய அவர், “கடந்த மாதம் தமிழகத்துக்கு இரண்டு மடங்குக்கும் மேலாக தடுப்பூசி டோஸ் ஒதுக்கியுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
ஆனால் அவற்றில் 1.74 லட்சம் வரவேண்டியுள்ளது.
இருப்பில் கொஞ்சம் தடுப்பூசிகளே உள்ளன.
ஜூன் மாதம், 42.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்குவதாகவும் அரசு உறுதியளித்துள்ளது.
ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ், ஜூன் 6-ம் தேதிதான் வரும். ஆகவே ஜூன் மாதத்துக்கான முதல் தவணை தடுப்பூசி டோஸ் வரும் வரைக்கான இடைப்பட்ட காலத்தில் தடுப்பூசி பணிகள் நிறுத்தப்படுகின்றன.
ஜூன் 3 முதல் தடுப்பூசி பணிகள் நிறுத்தப்படுகின்றன. மூன்று நாள்கள் வரை இந்த நிறுத்தம் தொடரும். கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை, ஆட்சியர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக்கூறியுள்ளார்.
முன்னதாக இன்று காலையில், மாநிலங்களுக்கு இதுவரை 23 கோடி தடுப்பூசிகள் விநியோகப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 1.75 கோடி தடுப்பூசிகள் மீதமிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
மேலும், இந்த வருட இறுதிக்குள் 18 வயதுக்கு மேலான அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும், உள்நாட்டு தடுப்பூசி தயாரிப்பு மூலமாக இது சாத்தியப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு இன்றுதான் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.