பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட தெற்கு ஒன்றியத்தில் அண்ணாநகர் நவல்பட்டு பகுதியில் தூர்வாரும் பணியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.
ரூபாய் 10 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி சூரியூரில் உப்பாறு ஆக தொடங்கி சோழமாதேவி உய்யகொண்டான் வாய்க்காலில் கலக்கின்றது.
இந்த வாய்க்கால் தூர் வார படுவதால் அண்ணாநகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதையும் வெல்ல பாதிப்பையும் சரி செய்ய சரிசெய்து பொது மக்களை வெல்ல அபாயங்களில் இருந்து காக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் துரித நடவடிக்கையால் நிதி ஒதுக்கி துவக்கினார்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன்,தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன்,
வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்
கே.எஸ்.எம்.கருணாநிதி, நவல்பட்டு சண்முகம், கயல்விழி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.