திருச்சியில் ஆன்லைனில் ரூ 10 லட்சம், 20 பவுன் நகை மோசடி செய்த கணவன் மனைவி உள்பட மூன்று பேர் மீது வழக்கு.
திருச்சியை அடுத்த நொச்சியம் மாதவப் பெருமாள் கோவில் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவரிடம் சேலம் மாவட்டம் சமத் காலனி பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் ஒரு பெண் அறிமுகம் ஆகி ஆன்லைன் வர்த்தகம் செய்கிறோம் அதில் தாங்கள் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி உள்ளார். இதனை நம்பிய விஜயகுமார்
அவர்களின் வார்த்தைகளை நம்பி, கடந்த 2023ம் ஆண்டு ஏப்.10 ந் தேதி திருச்சி தில்லை நகர் சாஸ்திரி ரோடு அருகே அவர்கள் மூன்று பேரிடம் ரூ. 10 லட்சம் பணம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் எந்த வர்த்தகத்திலும் முதலீடு செய்து லாப பணத்தை அளிக்கவில்லை. இதனை பார்த்து ஏமாற்றம் அடைந்த விஜயகுமார் இது குறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் தில்லை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.