Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் உட்பட 3 பேர் காயம் .

0

'- Advertisement -

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் உட்பட மூணு பேரு காயம் .

 

Ad banner

செந்துறையை அடுத்துள்ள பொன்பரப்பி கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டுசாமி மகன் ராஜசேகா்(வயது 41). இந்து முன்னணி திருச்சி கோட்டப் பொறுப்பாளரான இவா், சுவாமிமலையில் செய்த வேல் ஒன்றை மதுரையில் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாடுக்காகக் கொண்டு சென்று இந்து முன்னணி அமைப்பாளா்களிடம் கொடுத்துவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை காரில் ஊா் திரும்பினாா். ஜெயங்கொண்டம் வந்தபோது, அங்கு உடன் சென்ற சிலரை காரிலிருந்து இறக்கிவிட்டு, பொன்பரப்பிக்கு கிளம்பினாா்.

 

TVK ad

அப்போது, மருதூா் கிராமத்தில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் இருப்பது தெரியாமல், காா் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையறிந்த அப்பகுதியினா், காயத்துடன் இடிப்பாடுகளில் சிக்கியிருந்த இந்து முன்னணி திருச்சி கோட்டப் பொறுப்பாளா் ராஜசேகா், உடன் வந்த விஜய் மற்றும் காா் ஓட்டுநா் ராகவன் ஆகிய 3 பேரையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை முடிந்து மூவரும் வீடு திரும்பினா். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து சாலை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பாலம் கட்ட கான்கிரீட் போடும் பணி நடைபெற்று வந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மழை பெய்ததால், பணியை பாதியில் நிறுத்திவிட்டு, பணியாளா்கள் சென்று விட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.