திருச்சியில் ஓமியோபதி மருத்துவ முகாமை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார்
திருச்சியில் ஓமியோபதி மருத்துவ முகாமை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடங்கி வைத்தார்.
திருச்சி காஜா நகர் மக்கள் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற ஹோமியோபதி மருத்துவ முகாமை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துவக்கி வைத்தார்.
திருச்சி காஜா நகர் மக்கள் தொண்டு நிறுவனம் சார்பில், அரபிக் கல்லூரியில் நடை பெற்ற மாபெரும் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாமை தமிழகச் சுற்றுலாத் துறை அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளருமான வெல்லமண்டி என்..நடராஜன் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், முன்னாள் கோட்ட தலைவர் ஞானசேகரன் மற்றும் வெல்லமண்டி ஜவர்கலால் நேரு, சிந்தை முத்துக்குமார், டிபன் கடை கார்த்திகேயன் மற்றும் காஜா நகர் மக்கள் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.