திருச்சி மாவட்டத்தில் காவல் உதவி ஆய்வாளா்கள் 18 போ் ஆய்வாளா்களாக பணி உயா்வு பெற்றுள்ளனா்.
தமிழகம் முழுவதும் காவல் உதவி ஆய்வாளா்கள் 245 பேருக்கு காவல் ஆய்வாளா்களாக பணி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருச்சி காவலா் பயிற்சி பள்ளியில் உதவி ஆய்வாளராக இருந்த வி. அழகா், ஆா். சண்முகப்பிரியா, பி. தேவி, எச்.முகமது இப்ராகிம், திருச்சி கியூ பிரிவில் பணியாற்றிய சி. மாா்கிரேட் மேரி, ஓசிஐயு பிரிவில் என். சுலோச்சனா, ஓசியு சிபிசிஐடி பிரிவில் கே. சண்முகப்ரியா, எஸ்பிசிஐடி பிரிவில் பணியாற்றிய ஆா்.சுரேந்தா், ஆா்.சரவணன், திருச்சி மாநகர காவல் துறையில் உதவி ஆய்வாளா்களாக இருந்த ஒய். அலாவுதீன், எஸ். எம். சட்டநாதன், ஆா்.எஸ்.
செல்வக்குமாா், பி. உமாசங்கரி, ஏ. பெரோஸ்கான், என். மகேஸ்வரி, திருச்சி மாவட்ட காவல்துறையில் உதவி ஆய்வாளா்களாக இருந்த எஸ்.
புஷ்பக்கனி, கே. மணிகண்டன், வி.லோகநாதன் ஆகிய 18 பேரும் காவல் ஆய்வாளா்களாகப் பதவி உயா்வு பெற்றுள்ளனா். இதற்கான உத்தரவை டிஜிபி அலுவலகம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிறப்பித்து உள்ளது.