Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அமைச்சர் கே.என். நேரு வைத்த கறி விருந்தில் புறக்கணிக்கப்பட்ட நிர்வாகிகள் கடும் அதிருப்தி

0

'- Advertisement -

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு விழா வரும் மே மாதம் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் திறப்பு விழா எந்தவித பிரச்சனையும் இன்றி நடக்க வேண்டுமென, ரெட்டமலை ஒண்டி கருப்பசாமி கோவிலில் 15 கிடாக்கள் வெட்டி நிர்வாகிகளுக்கு விருந்தளித்து இருக்கிறார் அமைச்சர் கேஎன் நேரு.

 

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் கிளாம்பாக்கத்திற்கு இணையாக பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இதை அடுத்து பஞ்சப்பூர் தற்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மட்டுமல்லாது சோலார் திட்டங்கள், சரக்கு வாகன நிறுத்த முனையம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளது.

 

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், சரக்கு வாகன நிறுத்த முனையம், சோலார் திட்டங்கள், காய்கறி மார்க்கெட் ஆகியவற்றோடு திருச்சி டைடல் பார்க்கும் பஞ்சப்பூரில் தான் அமைய இருக்கிறது. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பொருத்தவரை ஏசி வசதி, சர்வீஸ் சென்டர், எஸ்கலேட்டர், லிஃப்ட், ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்து நிறுத்தம், உள்ளூர் பேருந்துகள் நிறுத்தம், பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், ஓய்விடம், உணவகம், கழிவறை, 24 மணி நேர கண்காணிப்பு, உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், புல்வெளி, பூங்கா, நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருக்கிறது.

 

இந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சபூர் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. வரும் மே மாதம் ஒன்பதாம் தேதி இந்த புதிய பேருந்து நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறந்து வைக்க உள்ளார் .

 

இந்த நிலையில் தற்போது பணிகள் 99 சதவீதம் நிலையில் ஒரு சில பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருச்சி புதிய பேருந்து நிலைய திறப்பு விழா எந்தவித பிரச்சனையும் இன்றி நடைபெற வேண்டும் என எடமலைப்பட்டிப்புதூரில் உள்ள புகழ்பெற்ற ரெட்டமலை கருப்புசாமி கோவிலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 15 கிடாய்களை வெட்டி அமைச்சர் கே.என்.நேரு வழிபாடு நடத்தி இருக்கிறார்.

 

காலை 9 மணிக்கு கோயிலுக்கு வந்த அவர் கிடாய்களை வெட்டி பூஜை செய்தார்.( திமுக கறைவேட்டி கட்டியவர்கள் திருநீர் குங்குமம் வைக்கக் கூடாது , கைகளில் சாமி கயிறு கட்டக்கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. )

 

தொடர்ந்து கிடாக்கள் சமைக்கப்பட்டு 250 கிலோ கோழிக்கறியும் சமைக்கப்பட்டு அங்குள்ள நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட துணை செயலாளர் முத்துச்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் கட்சியில் சில நிர்வாகிகளை முத்துச்செல்வம் அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சில நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர் என்கிறார்கள் திருச்சி மாவட்ட உடன்பிறப்புகள்.

 

பல நிர்வாகிகளுக்கு விருந்து குறித்து முறையாக தெரிவிக்காமல் தங்களது ஆதரவாளர்களை மட்டும் முத்துச்செல்வம் அழைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சர் கே.என். நேரு மீதும் சில நிர்வாகிகள் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

தற்போது என்னப்பா வம்பா இருக்கு… எந்த பிரச்சினையும் இருக்கக்கூடாதுன்னு கிடா வெட்டினா… அதுவே வம்புல இழுத்து விட்டுடும் போல இருக்கே என்று அமைச்சர் நொந்து போய் இருக்கிறார் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.