திருச்சி விமான நிலையத்தில்
மலேசியா செல்ல போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது
ஏர்போர்ட் போலீசார் நடவடிக்கை

திருச்சி ஏப்.10-
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சண்முகசுந்தரபுரம் பி.எஸ்.எஸ் நகரை சேர்ந்தவர் காசி. இவரது மகன் நீதிபதி (வயது 59 ). இவர் ஏர் ஏசியா விமான மூலம் மலேசியா செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் கவுண்டர் எண் – மூன்றில் பயணிகள் மற்றும் அவரது உடைமைகளை இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது நீதிபதியின் பாஸ்போர்ட்டை சோதனையிட்டபோது அவர் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது .
இது குறித்து ஏர்போர்ட் காவல் நிலைய போலீசில் புகார் அளித்து, இமிகிரேஷன் அதிகாரி லோகநாதன் நீதிபதியை போலீசாரிடம் ஒப்படைத்தார். ஏர்போர்ட் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.