Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: நண்பனை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது .

0

'- Advertisement -

திருச்சி அருகே  போதையில் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி சூடு – வாலிபர் கைது.

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி – போலீசார் விசாரணை

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அன்பில் மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதனை காண்பதற்காக லால்குடி வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.

 

இந்த நிலையில் லால்குடி அருகே கே வி பேட்டை – செங்கரையூர் இடைப்பட்ட பகுதியை சேர்ந்த பாண்டிதுரை என்பவர் அவர்களது நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகிய மூன்று பேரும் அன்பில் மாரியம்மன் கோவிலுக்கு மது போதையில் சென்றுள்ளனர். மேலும் அன்பில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் ஆனந்த், ஜெகன் ஆகிய 6 பேரும் தேர் திருவிழாவை பார்த்து அந்தப் பகுதியில் சுற்றி உள்ளனர்.

 

இதில் போதை தலைக்கேறிய பாண்டி துரை தான் வந்த இருசக்கர வாகனத்தை அங்கே விட்டு விட்டு நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என பாண்டிதுரை, வீரமணி வீட்டிற்கு சென்று தகாத வார்த்தையில் பேசியுள்ளார்.

வீரமணி உடனே அன்பில் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் ஆனந்த், ஜெகன் முன்று பேரிடமும் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தர சொல்லி உள்ளார். வாகனம் அன்பில் பகுதியில் இருந்துள்ளது அதனை எடுத்துக் கொண்டு பாண்டிதுரை வீட்டிற்கு கொடுப்பதற்காக சென்றனர்.

அப்போது போதையில் இருந்த பாண்டியன் சந்தோஷ் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வாக்குவாதம் முற்றிய நிலை பாண்டித்துரை விலங்குகளை வேட்டை ஆடுவதற்காக வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் சந்தோஷ்குமார் வயிற்றில் ஏர்கன் துப்பாக்கியின் குண்டு பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே சந்தோஷ் குமார் மயக்கம் அடைந்தார்.

உடனே அவரை அவரது நண்பர்கள் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மது போதையில் நண்பர்களுகுள்ளே விலங்குகளை வேட்டையாடும் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சந்தோஷ் குமாரை மேல்சிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீசார் பாண்டித்துரை வீட்டிற்கு சென்று சோதனை செய்து தப்பிய ஓடிய பாண்டித்துரையை இன்று காலை மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து  கைது செய்து சிறையில் அடைத்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.