இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியை காணாத தலைவர் நம் முதல்வர் தான். பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி .
திருச்சியில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான
மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கிழக்கு மாநகர பொன்மலை பகுதி திமுக சார்பில் மாஜி ராணுவ காலனி மெயின் ரோட்டில் நடைபெற்றது.
மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பொன்மலை பகுதி செயலாளர்
இ.எம் .தர்மராஜ் தலைமை தாங்கினார்.
41 வது வட்ட செயலாளர் சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
சேலம் மாவட்ட செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன்
மாநகர செயலாளர் மு. மதிவாணன்

ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
41 வது வட்ட ஆ செயலாளர் s. துரை நன்றியுரையாற்றினார்.
இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே. என். சேகரன் மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் மூக்கன், லீலாவேலு, மாநகர நிர்வாகிகள் நூற்கான், பொன்செல்லையா, சரோஜினி, தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட மாநகர பகுதி நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசிய போது :-
ஒருவர் தலைவராக பொறுப்பேற்று இதுவரை நடந்த தேர்தல்களில் தோல்வியே காணாத ஒரே தலைவர் யார் என்றால் அது தமிழக முதல்வர் தான் என்றும் எடுத்துரைத்தார். தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர்
இந்த கூட்டத்திற்கு சிறப்புரை நிகழ்த்த வருக புரிந்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சரும் சேலம் மாவட்ட செயலாளரும் மாண அண்ணன் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் அவர்களை வரவேற்பதாகவும் அவர் சுற்றுலாத்துறை அமைச்சராக முதன் முதலில் பொறுப்பேற்று முதலாவதாக ஒரு கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றால் அது நமது திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் தான் என்றும் இது நமக்கு கிடைத்த பெருமை என்றும் நமது இயக்கத் தலைவர் இளைஞர் அணி செயலாளராக இருந்த பொழுது அவர் மாவட்ட செயலாளராக பணியாற்றி பின்பு மாநிலத் துணைச் செயலாளராக முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி வந்தவர் தான் சுற்றுலாத்துறை அமைச்சர் என்றும் அவர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வது நமது திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு பெருமை என்றும் கூறினார்
மேலும் நமது தமிழக முதல்வர் மகளிருக்காக தான் பொறுப்பேற்றவுடன் கோட்டைக்குச் சென்று முதன்முதலாக அவர் போட்ட கையெழுத்து கட்டணமில்லா பேருந்து திட்டம் தான் என்றும் இதனால் ஒரு குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் ஒரு மாதத்திற்கு 888ரூபாய் மிச்சப்படுத்துவதாகவும் மேலும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதவன் திட்டம்,காலை உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை உருவாக்கி மக்கள் நலனில் அக்கறை காட்டுபவர் தான் தமிழக முதல்வர் என்றும் மேலும் தமிழக துணை முதல்வர் கடந்த வாரம் சட்டமன்றத்தில் எழுந்து நின்று மகளிர் உரிமைத் தொகை இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் மகளிர்கள் பெற்று வருவதாகவும் மேலும் மகளிர் தொகை கிடைக்கப்படாதவர்கள் விண்ணப்பித்து மகளிர் தொகையைப் பெற்றுக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் எடுத்துரைத்தார் ஆனால் ஒன்றிய அரசனது நமக்கு வழங்க வேண்டிய அனைத்து நிதிகளையும் முடக்குவதாகவும் இப்படிப்பட்ட ஒன்றிய அரசை எதிர்த்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தக் கூடியவர் தான் தமிழக முதல்வர் என்றும் எனவே அவரது கரத்தை வலுப்படுத்தக் கூடியது நமது கடமை என்றும் எடுத்துரைத்தார்.
இந்த கூட்டத்தில் 400 மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது .