திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு பலூன் பறக்கவிட்டு கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது .
மத்திய அரசு தமிழர்களை விரோதிக்கும் சட்டங்களை அமல் படுத்துவதை கண்டித்தும் குறிப்பாக நிதி பகிர்வு விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், கல்வி நிதி வழங்காததை கண்டித்தும் , வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதை கண்டித்தும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு பலூன் பறக்க விட்டு கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது .
மாவட்ட தலைவர் கலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் மோடிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.