இன்று பூங்காவை தூய்மைப்படுத்திய திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்,
திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர் இன்று ஞாயிற்றுக்கிழமை (6.4.2025) காலை சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
சுந்தர்ராஜ்
நகர் ஹைவேஸ் காலனி மற்றும் காவிரி நகர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தூய்மை பிரச்சாரத்தை தொழிலதிபர் ஆர்.எம்.முத்து தொடங்கி வைத்தனர்.

மாணவ மாணவிய பூங்கா முழுவதும் கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கலை சேகரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.
பேராசிரியர் முனைவர் முகமது காசிம் போதைப் பொருள்கள் ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க, மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
துரை செந்தில்குமார், நகர நலச் சங்க செயலாளர், மாணவர்களுக்கு அறிமுக உடற்பயிற்சி சொல்லிக் கொடுத்தார்.