Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த வங்கி உதவி மேலாளர் தற்கொலை

0

'- Advertisement -

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை இழந்த தனியாா் வங்கி உதவி மேலாளா் ரயில் முன் பாய்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

 

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், பிடாரமங்கலம் ஊராட்சி தேவா்மலை பகுதியைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் ஜெயக்குமாா் (வயது 33). இவா், ஈரோடு மாவட்டம், முத்தூரில் உள்ள தனியாா் வங்கி கிளையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்தாா். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 10 லட்சத்தை அவா் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ஜெயக்குமாா் தற்கொலைக்கு முயன்று வந்துள்ளாா்.

 

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனூா் அருகே நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை வந்தாா். பிற்பகல் 3 மணி அளவில் அந்த வழியாக சென்ற ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா்.

 

நாமக்கல் ரயில்வே போலீஸாா் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். தற்கொலை செய்துகொண்ட ஜெயக்குமாருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனா்.

 

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.